சபா மாநிலத்திற்கு புதிய ஆளுநர் பதவியை ஏற்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஆளுநர் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் விரைவில் மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மாநில முதலமச்சர் ஹஜிஜி நூர் தெரிவித்துள்ளார்.
சபாவின் அடுத்த புதிய ஆளுநராக யாரை நியமிப்பது என்பது மாமன்னர் முடிவு செய்வார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது சபா ஆளுநராக பதவி வகித்து வரும் அம்னோவை சேர்ந்த முன்னாள் கின்னாபாத்தாங்கான் எம்.பி.யான Juhar Mahiruddin- னின் பதவிக்காலம் இவ்வாண்டு இறுதியில் நிறைவு பெறுகிறது.








