கோலசிலாங்கூர், நவ. 18-
சிலாங்கூர மாநிலத்தில் வசதிகுறைந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா, மாநில இந்தியர்களுக்கு உதவுவதில் பெரும் பங்காற்றி வருகிறது.

அந்த வகையில் ஏழ்மை நிலையில்
மீன்படித் தொழிலை வருமானத்திற்கான ஆதாரமாக நம்பியிருக்கும் கோலசிலாங்கூர், ஜெராமைச் சேர்ந்த தீபன் குப்புசாமிக்கு படகிற்கான மோட்டார் இயந்திரத்தை வழங்கி ஐ-சீட்.
உதவியிருக்கிறது.
பிரதான சாலையிலிருந்து சுமார் தொலைவில் புதர் மண்டிய பகுதிக்கு மத்தியில் சிதிலமடைந்த
வாடகை வீட்டில் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் தீபன் வசித்து வருகிறார். கடலில் மீன்கள் இருந்தாலும் அவை தீபானுக்கு கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. அதனால் அவருக்கு வருமானமும்
நிரந்தரமில்லை.

அண்மையில் நடைபெற்ற கோல சிலாங்கூர் மாவட்ட நிலையிலான ஐ-சீட் வர்த்தக உபகரண ஒப்படைப்பு நிகழ்வின் போது மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு, மீனவர் தீபனின் வீட்டிற்கு நேரில் சென்று இந்த உதவிப் பொருளை ஒப்படைத்தார்.
அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படும் வீடு, அருகிலுள்ள புதர்களிலிருந்து அடிக்கடி படையெடுக்கும் பாம்புகள் என பலவித இன்னல்களுக்கு மத்தியில் வசித்து வரும் இக்குடும்பத்தின் நிலையைக் கண்டு தாம் மனம் கலங்கிப் போனதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
தீபன் குடும்பத்திற்கு மாநில அரசின் Selangor Ku (சிலாங்கூர கூ ) வீடுகள் கிடைப்பதில் வேண்டிய உதவிகளைச் செய்யும்படி தமது தொகுதி அதிகாரிகளை தாம் பணித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஐ-சீட் வாயிலாக தீபனுக்கு கிடைத்த இந்த உதவியானது, வருமானதைப் பெருக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாக பாப்பாராய்டு கூறினார்.








