கோலாலம்பூர், நவ.6-
எதிர்க்கட்சி எம்.பி.கள் தங்கள் தொகுதியில் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவதற்கு அவர்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்குவது குறித்து விவாதிப்பதற்கு அரசாங்கம் வெளிப்படையான போக்கை கொண்டுள்ளது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசேப் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு வழங்குவது குறித்து பெரிக்காத்தான் நேஷனலுடன் அரசாங்கம் முன்வைத்த இரண்டு கருத்திணக்க உடன்பாட்டுகளையும் அந்த கூட்டணி நிராகரித்து விட்டதை துணைப்பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதன் தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் தனிப்பட்ட முறையிலும் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








