வரும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனல் இலக்கு கொண்டு இருப்பதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் அவுத்தார் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மஇகா போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அது தோல்விக் கண்டது. Sungai Tua, Sentosa மற்றும் Ijok ஆகியவையே பாரிசான் நேஷனல் சார்பில் மஇகா போட்டியிட்ட சட்டமன்றத் தொகுதிகளாகும். இந்நிலையில் பாரிசான் நேஷனலில் ஓர் அங்கமாக விளங்கும் மஇகாவிற்கு வரும் சட்டமன்றத்தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி அவுத்தார் சிங், காணொளி வெளியிட்டுள்ளார்.