Feb 22, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கிறார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி
அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கிறார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.22-

பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய தலைவராக பாஸ் கட்சியின் துணைத் தலைவரும் திரங்கானு மாநில முதல்வருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஸ், கெராக்கான், பாஸ், MIPP ஆகியக் கட்சிகளின் தேசியத் தலைவர்களின் கூட்டு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் இப்பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இன்று நடைபெற்ற கூட்டணியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதே வேளையில், முகைதீன் யாசின் அக்கூட்டணியின் துணைத் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்டுள்ள பெரிய கட்சி என்ற அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாஸ் கட்சியே ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாற்றங்கள் கூட்டணியின் எதிர்கால செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related News