கோலாலம்பூர், டிசம்பர்.02-
நடந்து முடிந்த சபா சட்டமன்றத் தேர்லில் அடையப் பெற்ற தோல்வியைப் பக்காத்தான் ஹராப்பான் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்று அதன் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபா சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட மாபெரும் பின்னடைவு, வருகின்ற பொதுத் தேர்தலில் எதிரொலிக்காமல் இருக்க தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்று ஜசெக உதவித் தலைவரும், பாங்கி எம்.பி.யுமான ஷாரெட்ஸான் ஜொஹான் கேட்டுக் கொண்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு சபா சட்டமன்றத் தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் ஜசெக, வெற்றிப் பெற்ற நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் எட்டு தொகுதிகளையும் கட்சி இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜசெக மற்றும் பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக நம்பிக்கை இழக்கப்பட்டதற்கான ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதையே சபா தேர்தல் முடிவு காட்டுவதாக ஷாரெட்ஸான் ஜொஹான் தெரிவித்தார்.








