கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-
Gaza முனையில் தாக்குதலுக்கு ஆளாகி, கடும் காயம் அடைந்த பாலஸ்தீன மக்கள், மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்..
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் அங்கு ஓர் இணக்கம் கண்ட பின்னரே அல்லது அந்நாட்டில் நல்ல சூழ்நிலை திரும்பியப் பின்னரே சம்பந்தப்பட்ட பாலஸ்தீனர்கள், மலேசியாவிலிருந்து அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்று அம்னோ துணைத் தலைவரும், வெளியுறவு அமைச்சருமான டத்தோஸ்ரீ முகமது ஹசன் தெரிவித்தார்.
குறைந்த பட்சம் ஆயுதப்போராட்டத்தை நிறுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஓர் உடன்பாடு கண்டப் பின்னரே சம்பந்தப்பட்ட பாலஸ்தீனர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறுவர் என்று முகமது ஹசன் குறிப்பிட்டார்.








