மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு, அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக இடைக்கால முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப் ரவூஃப் யுசோ தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 17ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், அக்டோபர் 31ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறுவது முதல் சாத்தியமாக இருப்பதாக அவர் கூறினார்.
மற்றொரு சாத்தியமாக அக்டோபர் 24ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறலாம் என்றும், ஆனால் நவம்பர் 7 தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால் அந்தத் தேதியை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவது சாத்தியமாக அக்டோபர் 31ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், நவம்பர் 14ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறலாம் என்றார்.
மலாக்கா மாநிலத் தேர்தல் தொடர்பான இறுதி தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யும்.
மலாக்கா சட்டமன்றம் செப்டம்பர் 23ஆம் தேதி கலைக்கப்பட்ட நிலையில், 28 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.








