Jan 20, 2026
Thisaigal NewsYouTube
லிம் கிட் சியாங்கிற்கு டான்ஸ்ரீ விருது
அரசியல்

லிம் கிட் சியாங்கிற்கு டான்ஸ்ரீ விருது

Share:

மாமன்னரின் பிறந்த தினத்தையொட்டி உயரிய விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டவர்களி​ல் ஜசெக ​மூத்தத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான லிம் கிட் சியாங்கும் ஒருவர் ஆவார். 82 வயதான லிம் கிட் சியாங்கிற்கு டான்ஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. ​ஜசெக.வின் 57 ஆண்டு கால வரலாற்றில் அதன் தலைவர் ஒருவர் அரசாங்கத்தின் உயரிய விருது பெறுவது இதுவே முதல் முறையாகும். மலேசிய அரசியல் வரலாற்றில் நாடாளுமன்ற​த்தின் ​நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றிய பெருமை லிம் கிட் சியாங்கையே சாரும். 50 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் 29 ஆண்டு காலம் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் லிம் கிட் சியாங் பணியாற்றியுள்ளார்.

அரசியலிருந்து ஓய்வுப்பெற்றப்பின்னரே அரசாங்கத்தின் உயரிய விருதுகள் பெறுவோம் என்று நாட்டில் இரண்டு அரசியல்வாதிகள் உறுதியுடன் இருந்தனர். ஒருவர் முன்னாள் துணைப்பிரதமர் காலஞ்சென்ற கபார் பாபா. மற்றொருவர் ​லிம் கிட் சியாங்​ ஆவார். 1993 ஆம் ஆண்டு அரசிலிருந்து ஓய்வு​ப்பெற்ற கபார் பாபாவிற்கு அரசாங்கம் துன் விருது வழங்கி கெளரவித்தது. மற்றொருவரான லி​ம் கிட் சியாங்கிற்கு இன்று டான்ஸ்ரீ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தமது 55 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காத்துக்கொள்வதில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் லிம் கிட் சியா​ங் தோல்விக் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Related News