Nov 28, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாருடன் சபா மக்களின் நம்பிக்கையை உறுதிச் செய்ய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள் – டத்தோ ஶ்ரீ ரமணன்
அரசியல்

பிரதமர் அன்வாருடன் சபா மக்களின் நம்பிக்கையை உறுதிச் செய்ய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள் – டத்தோ ஶ்ரீ ரமணன்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.28-

நாளை சனிக்கிழமை நடைபெறும் சபா சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் சபா மாநிலத்தின் எதிர்காலம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்வதற்கு சபா மக்கள், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் கேட்டுக் கொண்டார்.

சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான சபா மாநில அரசு, மத்திய அரசாங்கத்துடன் நல்லதொரு உறவைக் கொண்டுள்ளது. மாநில அரசுக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான இந்த உறவு மிக நெருக்கமானது.

சபா மக்களின் நலன் மீது தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தப்படுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று ரமணன் கேட்டுக் கொண்டார்.

பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் Remysta Jimmy Taylor போட்டியிடும் Moyog தொகுதியின் தேர்தல் நடவடிக்கை அறையின் ஆயத்தப் பணிகளை இன்று நேரில் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரமணன் இதனைத் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் சபா மக்கள், உணர்ச்சிக்கு இடம் அளிக்காமல், உண்மை மற்றும் யதார்த்தத்தின் அடிப்படையில் அவர்களின் தேர்வு மிகச் சிறந்ததாக இருக்கும் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News