Nov 19, 2025
Thisaigal NewsYouTube
முகைதீன் வீட்டில் எதிர்கட்சித் தலைவரை மாற்றுவது குறித்த விவாதம் நடைபெறவில்லை
அரசியல்

முகைதீன் வீட்டில் எதிர்கட்சித் தலைவரை மாற்றுவது குறித்த விவாதம் நடைபெறவில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, நவம்பர்.19-

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் வீட்டில் நேற்றிரவு பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றக் கூட்டத்தில், எதிர்கட்சித் தலைவரை மாற்றுவது குறித்த விவாதம் நடைபெறவில்லை.

அக்கூட்டத்தில், சபா மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து மட்டுமே கலந்தாலோசிக்கப்பட்டதாக சபாக் பெர்ணம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாம் சலான் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற அக்கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

18 நாடாளுமன்ற உறுப்பினர்களும், முகைதீன் யாசினுக்கு தங்களது முழு ஆதரவைக் கொடுத்துள்ள நிலையில், சபா மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதில் மட்டுமே தங்களது கவனம் இருக்கும் என்றும் கலாம் ஆலாம் தெரிவித்தார்.

Related News