கோலாலம்பூர், நவம்பர்.26-
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தனது முன்னாள் அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகினை எந்த ஒரு தயக்கமும் இன்றி எஸ்பிஆர்எம் விசாரணை செய்யலாம் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தனது மூத்த அரசியல் செயலாளராகப் பணியாற்றி வந்த அவரது ராஜினாமாவைத் தான் ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார் அவருக்கு நன்றியும் கூறியுள்ளார்.
மடானி அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுவதால், சட்டப்படி எந்த ஓர் இடையூறும் இன்றி விசாரணை செய்ய வழிவகை செய்வதாகவும் அன்வார் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.








