கோலாலம்பூர், டிசம்பர்.16-
இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ, கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பது பொருத்தமானதாகும் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் வர்ணித்துள்ளார்.
சிகாம்புட் எம்.பி.யாக இருக்கும் ஹன்னா இயோ, கூட்டரசு பிரதேதசத்தின் மேம்பாட்டிற்குத் தமது புதிய பொறுப்பின் மூலம் இன்னும் சிறந்த முறையில் பங்களிப்பை வழங்க முடியும் என்று தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் ஹன்னா இயோவின் இலாகாவுடன் கூடிய பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.








