கங்கார், டிசம்பர்.27-
பெர்லிஸ் மந்திரி பெசாரை நியமிப்பதற்கான இறுதி முடிவு என்பது முழுக்க முழுக்க பெர்லிஸ் ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் புத்ரா ஜமாலுலாயில் அவர்களின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்று பெர்லிஸ் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ ஷாஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.
ஆளும் கூட்டணி பரிசீலனைக்காக பல சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களைச் சமர்ப்பித்தாலும், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பெர்லிஸ் ராஜாவிடமே உள்ளது என்று ஷாஹிடான் கூறினார்.
'ஓர் அரசியலமைப்புக்கு உட்பட்ட ஆட்சியாளர் என்ற முறையில், சட்டமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒரு வேட்பாளரை நியமிப்பதில் பெர்லிஸ் ராஜா அரசியலமைப்பின்படி செயல்படுவார் என்று ஷாஹிடான் நம்பிக்கைத் தெரிவித்தார்.








