கோலாலம்பூர், டிச.7-
தமது ஆறு ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் விவகாரத்தில் நம்பிக்கை ஒளி தென்படத் தொடங்கியிருப்பதாக அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் பாரிசான் நேஷனலுக்கு நஜீப் ஆற்றிய பங்களிப்பு எளிதில் மறந்து விட முடியாது என்று ஜாஹிட் குறிப்பிட்டார்.
இன்று பாரிசான் நேஷனலின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் அதன் தலைவருமான அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்தார்.
போஸ்கூ விவகாரத்தில் தற்போது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஜாஹிட் குறிப்பிட்டார்.








