Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து
அரசியல்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.08-

மலேசியா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில், பல்வேறு முக்கிய துறைகள் சார்ந்த 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. புத்ராஜெயாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற கூட்டுக் செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார். இந்த ஒப்பந்தங்கள் ஊடகத் தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, ஊழல் தடுப்பு, தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கியுள்ளன.

மேலும், அனைத்துலக அமைதி காக்கும் பணிகள், செமிகண்டக்டர் தொழில்நுட்பம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியத் துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன. ஆசியான் அமைப்பின் பின்னணியில், இந்தியாவின் பெரும் பொருளாதார வளர்ச்சியால் மலேசியா பல நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். 2025-ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 18.59 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைத் தாண்டி, இரு நாடுகளும் புதிய வாய்ப்புகளைத் தேட இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து