கோத்தாகினபாலு, டிச.12-
சபா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் முதலமைச்சர் மூசா அமான் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் சபா நடப்பு ஆளுநர் ஜுஹார் மஹிருடின் பதவி தவணைக்காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து சபாவின் புதிய ஆளுநரை தேர்வு செய்வதற்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியல் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.
சபா புதிய ஆளுநருக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியலில் சபா அம்னோவின் முன்னாள் தொடர்புக்குழுத் தலைவரான மூசா அமானின் பெயர் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.