அக்டோபர் 07
சர்ச்சையைத் தூண்டும் மற்றும் இஸ்லாத்தின் புனிதத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நிகழ்வும் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் எச்சரித்துள்ளார்
முஸ்லீம் உணர்வுகள், குறிப்பாக மதத் தீர்ப்புகள் மற்றும் மதிப்புகள் குறித்து மரியாதை மற்றும் புரிதல் வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
மாறுபட்ட கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருத்தமற்ற உடை அணிந்து வெளிநாட்டினர் பங்கேற்ற ஜொகூரில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வைப் பற்றி குறிப்பிட்ட அவர், முழுமையான போலீஸ் விசாரணைக்கான ஜொகூர் மாநில அரசின் கோரிக்கையை பிரதமர் துறை முழுமையாக ஆதரிக்கிறது என்றார்.
இந்தப் பிரச்சினையைக் கையாள அதிகாரிகளை நம்புங்கள். தேசத்தின் செழிப்புக்காக எப்போதும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இன்று ஓர் அறிக்கையில் கூறினார்!








