கோலாலம்பூர், டிச. 12-
பத்து பூத்தே தீவு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு எதிராக போலீஸ் புகார் செய்வதற்கும், அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்வதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அரசாங்க ஆதரவு எம்.பி. ஒருவர் இன்று தமது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளார்.
மலேசியாவை மேம்படுத்துவதற்கு தமது வாழ்நாளையே தியாகம் செய்த ஓர் உன்னத தலைவரின் அந்திமக் காலத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்வதை தம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று பிகேஆர் கட்சியின் பாசீர் கூடாங் எம்.பி. ஹஸான் அப்துல் கரீம் குறிப்பிட்டார்.
துன் மகாதீருக்கு எதிராக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது மூலமும், அவருக்கு தண்டனை விதிப்பது வாயிலாகவும் சிங்கப்பூரிடம் இழந்த பத்து பூத்தே தீவை மலேசியா மீண்டும் கைப்பற்ற முடியுமா? என்று அந்த எம்.பி. கேள்வி எழுப்பினார்.
தற்போது 100 ஆவது வயதை நோக்கி பயணித்துக்கொண்டும், IJN மருத்துவமனையும், வீடுமாக அலைந்து கொண்டு இருக்கும் துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார் வேண்டாம், குற்றவியல் வழக்கு வேண்டாம் என்று அந்த பிகேஆர் எம்.பி. தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.