Nov 1, 2025
Thisaigal NewsYouTube
அரசு நிர்வாக பலவீனங்களைக் கண்டறிந்து, அரசு ஊழியர்கள் திறமையானவர்களாக இருப்பதை உறுதி செய்கிறது
அரசியல்

அரசு நிர்வாக பலவீனங்களைக் கண்டறிந்து, அரசு ஊழியர்கள் திறமையானவர்களாக இருப்பதை உறுதி செய்கிறது

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 13-

மடானி அரசாங்கம் மிக விரைவில் , அரசாங்க நிர்வாகத்தில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து, அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை மேலும் திறம்பட செய்ய உறுதிசெய்யும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறியுள்ளார்.

மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்க ஊழியர்களின் நிர்வாக பலவீனங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டில் பொதுப் பணிகள் இன்னும் திருப்திகரமாக இல்லை எனக் கண்டறிந்து உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

"புதிய தலைமைச் செயலாளர் வழி , உயர் அதிகாரிகளுக்கு மிக வலுவான அழுத்தத்தை கொடுக்க தான் பணித்துள்ளதாகவும், அதனை தானே தனிப்பட்ட முறையில் கண்காணிக்க உள்ளதாகவும் மலேசிய சீன வணிக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (ACCCIM) 78வது ஆண்டு பொதுக்கூட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது கூறினார்.

முக்கியமாக, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பதிவு இலாகா மற்றும் ஓட்டுனர் உரிமம் தொடர்பான துறைகளை அழுத்தமாக கண்காணிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தத் துறைகளில் சில மேம்பாடுகள் இருந்தாலும், இன்னும் திருப்திகரமாக இல்லை என்பதால்தான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), பல அதிகாரிகளை தினசரி கைது செய்கிறது என்றார்.

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!