டிஏபி பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், நெகிரி செம்பிலான், ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னா சட்டமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றார். சென்னா தொகுதியை கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தற்காத்து வரும் அந்தோணி லோக் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ரோஸ்மாடி ஆரிஃப்- பிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியிருந்த அந்தோணி லோக்கிற்கு 5,302 வாக்குகளும், ரோஸ்மாடி ஆரிஃப் பிற்கு 3,190 வாக்குகளும் கிடைத்தன. சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான அந்தோணி லோக், இந்த வெற்றியின் மூலம் அவர் சென்னா தொகுதியை மூன்றாவது முறையாக தற்காத்துக்கொண்டார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


