ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் 3ஆர் விவகாரத்தை எழுப்பக்கூடாது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்புடீன் நசுதியோன் நினைவுறுத்தியுள்ளார். சமயம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்புடைய விவகாரத்தை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த 3ஆர் விவகாரத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் எழுப்பும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிந்தனை சட்டம் பாயும் என்று சைப்புடீன் எச்சரித்துள்ளார். அரசியல்வாதிகளின் உரைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில் நடப்பு விதிமுறைகள் மீறப்படுமானால் அரச மலேசிய போலீஸ் படை உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் நினைவுறுத்தினார்.ரிலிஜன்,ரோயல்டி,ரேஸ் ஆகியவையே அந்த 3ஆர் என்று சைப்புடீன் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
