பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20-
அனைத்துலக போட்டியாற்றல் தர வரிசையில், மலேசியா 34ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் சரியாத தடத்தில் இல்லாததை பிரதிபலிப்பதாக, பெரிக்காதான் நசியனால் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் சாடியுள்ளார்.
நிர்வாக மேம்பாட்டுக்கான அனைத்துலக கழகம் - IMD வெளியிட்டுள்ள அந்த தரவில், சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
உள்கட்டமைப்பை தவிர, அளவிடப்பட்ட இதர அனைத்து துறைகளிலும், மலேசியா பின் தங்கியுள்ளது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மின் தலைமைத்துவத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அது தவிர, சுவிட்சர்லாந்து-ந்தை தளமாக கொண்ட வர்த்தக பள்ளி ஒன்று வெளியிட்டுள்ள தரவின் படி, 14 நாடுகளை உட்படுத்திய ஆசிய பசிபிக் நாடுகளிலும், மலேசியா 4 இடங்கள் பின் தள்ளப்பட்டு 10ஆவது இடத்தில் உள்ளது.
தென்கிழக்கு ஆசியாவிலும் தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளைவிட மலேசியா பின் தங்கியுள்ளது.
நாட்டின் வரலாற்றில் அனைத்துலக போட்டியாற்றல் தர வரிசையில், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்திற்கு பின்னால் மலேசியா தள்ளப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
போட்டியாற்றலுடனும் வலுவான பொருளாதாரத்துடனும் ஆசியாவின் புலியாக பார்க்கப்பட்ட மலேசியாவுக்கு, அந்த தரவுகள் கசப்பான ஒன்றாகவே அமைந்துள்ளன.
இனியும், வெறும் வார்த்தைகளால் ஆட்சி புரிவதைவிட, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், அன்வார் முனைப்பு காட்ட வேண்டுமென முகைதீன் அறிவுறுத்தினார்.








