கங்கார், டிசம்பர்.28-
பெர்லிஸ் மாநிலத்தின் 9-வது முதல்வராக கோலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் அபு பாக்கார் ஹம்ஸா இன்று மாலை ஆராவ் அரண்மனையில் அம்மாநில ஆட்சியாளர் துவாங்கு சையிட் சிராஜுடின் புத்ரா ஜமாலுலாயில் முன்னிலையில் கோலாகலமாகப் பதவியேற்றார். உடல்நலக் குறைவு காரணமாக முஹமட் ஷுக்ரி ரம்லி மந்திரி பெசார் பணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, பெர்சாத்து கட்சியின் மாநிலத் தலைவரான அபு பாக்கார் இந்த உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஷுக்ரிக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதற்காக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது.








