May 3, 2026
Thisaigal NewsYouTube
எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு
அரசியல்

எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு

Share:

அம்னோ கட்சியில் மீண்டும் இணைய விரும்பும் அனைவருக்கும் அதன் கதவுகள் திறந்தே உள்ளதாக அதன் உச்ச மன்ற உறுப்பினரும் உயர்கல்வி அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் உள்ளிட்ட தலைவர்களும் கட்சிக்கு திரும்ப விரும்பினால் வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் மீண்டும் கட்சியில் இணைய எடுத்து முயற்சியை ஜம்ரி வரவேற்றுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர் தொடர்ந்து அம்னோவுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட, அம்னோ பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியைச் சந்தித்த கைரி ஜமாலுடின் கட்சியில் மீண்டும் இணையும் முறையீட்டு கடிதத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு