Oct 30, 2025
Thisaigal NewsYouTube
அரசியல் சர்ச்சைகளில் ஆட்சியாளர்களை சம்பந்தப்படுத்தாதீர்
அரசியல்

அரசியல் சர்ச்சைகளில் ஆட்சியாளர்களை சம்பந்தப்படுத்தாதீர்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 30-

அரசியல் சர்ச்சைகளில் ஆட்சியாளர்களை இழக்கக்கூடாது என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபிதீன் இட்ரிஸ் ஷா கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகள் அல்லது அவதூறுகளை கூற வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.

ஆட்சியாளர்கள் தொடர்பான எந்தவொரு விமர்சனமும் அல்லது பின்னூட்டமும் பொருத்தமான வழிகளின் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்பதுடன் விவேகத்துடன் செயல்படுமாறு சுல்தான் கேட்டுக்கொண்டார்.

ஆட்சியாளர்கள், சமயம், இனம் தொடர்புடைய 3R விவகாரங்களில் மக்களின் சிந்தனையில் .நஞ்சை விதைக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட தரப்பினருக்கு சுல்தான் நினைவுறுத்தினார்.

வெறுப்புணர்வு அரசியலை தவிர்க்க வேண்டும். ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று சிலாங்கூர் வலியுறுத்தினார்.

அரச பரிபாலனம் என்பது அரசியலுக்கு மேலானதாகும். எனவே எத்தகைய குற்றச்சாட்டும், விமர்சனமும் உரிய வழிகளில் தெரிவிக்க வேண்டும் என்று சுல்தான் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் கிளந்தான், குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், முந்தைய மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை மேற்கோள்காட்டி பேசிய சம்பவத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் சுல்தானின் இந்த நினைவுறுத்தல் அமைந்துள்ளது.

Related News

அரசாங்கத்தின் அடைவு நிலையைக் கண்டு மனசங்கடம்  வேண்டாம்: எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் பதிலடி

அரசாங்கத்தின் அடைவு நிலையைக் கண்டு மனசங்கடம் வேண்டாம்: எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் பதிலடி

அன்வாரின் வழக்கறிஞர் 'பொருத்தமற்ற' கேள்விகள் எழுப்புகிறார் - மகாதீர் அதிருப்தி!

அன்வாரின் வழக்கறிஞர் 'பொருத்தமற்ற' கேள்விகள் எழுப்புகிறார் - மகாதீர் அதிருப்தி!

மலேசியா மிகச் சிறந்த நாடு, அன்வார் மிகச் சிறந்த தலைவர் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் புகழாரம்!

மலேசியா மிகச் சிறந்த நாடு, அன்வார் மிகச் சிறந்த தலைவர் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் புகழாரம்!

நாங்கள் பொறாமைக் கொள்ளவில்லை: பெரிக்காத்தான் நேஷனல் விளக்கம்

நாங்கள் பொறாமைக் கொள்ளவில்லை: பெரிக்காத்தான் நேஷனல் விளக்கம்

தொகுதிகள் எல்லைகள் மறுவரைவு: பல நாடாளுமன்றத் தொகுதிகள் பிரிக்கப்படலாம்

தொகுதிகள் எல்லைகள் மறுவரைவு: பல நாடாளுமன்றத் தொகுதிகள் பிரிக்கப்படலாம்

மலேசியாவின் வரலாற்றுச் சாதனை! ஆசியான் உச்சநிலை மாநாடு 2025: உலக அரங்கில் ஜொலித்த மலேசியா!

மலேசியாவின் வரலாற்றுச் சாதனை! ஆசியான் உச்சநிலை மாநாடு 2025: உலக அரங்கில் ஜொலித்த மலேசியா!