Oct 29, 2025
Thisaigal NewsYouTube
அந்த மாற்றுத்திறனாளி விவகாரம் என்ன ஆனது
அரசியல்

அந்த மாற்றுத்திறனாளி விவகாரம் என்ன ஆனது

Share:

ஜொகூர் , அக்டோபர் 24-

ஜோகூர் மாநில இடைக்கால சுல்தானின் போலீஸ் மெய்க்காவலரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு மாற்றும் திறனாளியான e- hailing ஓட்டுநரின் விவகாரம் என்ன ஆனது என்பது குறித்து அரசாங்கம் விளக்க அளிக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி, பாசீர் கூடாங் எம்.பி. ஹசன் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த விவகாரத்தை தாம் அப்படியே விட்டு விட முடியாது என்று நாடாளுமன்றத்தில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான சட்ட மசோதா விவாதத்தின் போது ஹசன் அப்துல் கரீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார் இது குறித்து முழுமையான விளக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News