கோலாலம்பூர், ஜனவரி.06-
டான்ஸ்ரீ முகைதின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் பலம் பொருந்திய தலைவர்களில் ஒருவரான சைஃபுடின் அப்துல்லா அக்கட்சியிலிருந்து இன்று நீக்கப்பட்டார்.
இண்டெரா மாஹ்கோத்தா எம்.பி.யான சைஃபுடினின் நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற கட்சியின் ஒழுங்கு நடடிக்கைக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








