அரசாங்கத்தில் பிரதான பங்களிப்பை வழங்குவற்கு மஇகாவிற்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும் என்று அக்கட்சி இன்று முன்வைத்துள்ள கோரிக்கை ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ சி.ஏ விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் பாரிசான் நேஷனல் தலைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள இதர கட்சித் தலைவர்களுடன் தாம் கலந்து ஆலோசிக்கவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று மஇகா தலைமையத்தில் மஇகா முக்கியத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார். மஇகாவிற்கு அமைச்சர் பதவி உட்பட அரசாங்க சார்பு நிறுவனங்களான ஜி.எல்.சி யில் முக்கியப் பதவிகள் வழங்கப்படுவது குறித்து பிரதமர் பரிசீலிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்து இருந்தார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


