Oct 29, 2025
Thisaigal NewsYouTube
இபிஎப். புதிய திட்டம் 23 லட்சம் பேருக்கு பயன் அளிக்கும்
அரசியல்

இபிஎப். புதிய திட்டம் 23 லட்சம் பேருக்கு பயன் அளிக்கும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 21-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில், தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். திட்டத்தில் சில சலுகைகள் அறிவித்து இருப்பது மலேசியர்கள், வெளிநாட்டவர்கள் என சுமார் 23 லட்சம் பேருக்கு பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அந்நியத் தொழிலாளர்களுக்கு இபிஎப். சந்தா கட்டாயமாக்கப்பட்டுட்டுள்ளது. இபிஎப் சந்தாதாரர்கள் தங்களின் மொத்த சேமிப்புத்தொகையில் ஒரு பகுதியை தங்களின் நெருக்கிய உறவினருக்கு பெயர் மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலன் பாதுகாப்பில் யாரும் பின்தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும்,/ எவ்வித சிரமமின்றி தங்களின் அந்திம காலத்தை பாதுகாப்புடன் உறுதி செய்து கொள்வதற்கும் இத்திட்டங்கள் வகை செய்கின்றன.

I- Saraan ( ஐ- சாரான் ) மற்றும் i- Suri போன்ற இபிஎப் திட்டங்கள், சிறந்த அனுகூலத்தை சந்தாதாரர்களுக்கு வழங்க வல்லதாகும் என்று இபிஎப். வாரியம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News