Apr 20, 2026
Thisaigal NewsYouTube
சுலாமான் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: சபா முதலமைச்சர் நம்பிக்கை
அரசியல்

சுலாமான் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: சபா முதலமைச்சர் நம்பிக்கை

Share:

பாப்பார், நவம்பர்.29-

இன்று நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலில் சுலாமான் தொகுதியில் ஒன்பதாவது தவணையாகப் போட்டியிட்ட மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர், அந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுலாமான் தொகுதியில் ஹஜிஜி நோர், கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து போட்டியிட்டு வருகிறார். இத்தொகுதியில் இதுவரை 8 முறை வெற்றிப் பெற்றுள்ளேன். தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதற்கான நுணுக்கங்களை அறிந்து வைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

தாம் நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதியாக இருந்து, மக்களுக்குச் சேவையாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த முறையும் தொகுதி மக்கள் தம்மை வெற்றிப் பெறச் செய்வார்கள் என்று துவாரானில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சபா ஆளும் GRS கூட்டணியின் தலைவருமான ஹஜிஜி நோர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே வேளையில் மக்கள் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சுலாமான் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: சபா முதலம... | Thisaigal News