கல்வி, கட்டுமானம் மற்றும் தற்காப்பு ஆகிய துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கு மலேசியாவும் தீமோர் லெஸ்தேவும் உறுதிப்பூண்டுள்ளன.
மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள தீமோர் லெஸ்தே நாட்டின் பிரதமர் கை ராலா எக்ஸானா குஸ்மாவ்வை புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று சந்தித்தப்பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இதனை தெரிவித்தார்.
தென்கிழக்காசிய நாடான தீமோர் லெஸ்தேவின் பிரதமரும் டத்தோஸ்ரீ அன்வாரும் நடத்திய சந்திப்பில் தொழில்துறை மேன்மைக்கு டிவேட் தொழில்கல்வித்திட்டத்திற்கு அதீத முக்கியத்துவம் அளித்தாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








