கோலாலம்பூர், செப்டம்பர்.21-
பாஸ் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் எழுந்த கடுமையான விமர்சனங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசானும், துணைத் தலைவர் அஹ்மாட் சம்சூரி மொக்தாரும் கெராக்கான் கட்சித் தலைவர் டொமினிக் லாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
அந்த இரண்டு பாஸ் கட்சி தலைவர்கள் முன்வைத்த விமர்சனங்கள், சில உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அது பாஸ் கட்சியின் அதிகாரப்படியான நிலைப்பாடு அல்ல என்றும் விளக்கமளித்துள்ளனர். அதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டதாக, டொமினிக் லாவ் ஊடகத்திடம் கூறினார்.