Dec 20, 2025
Thisaigal NewsYouTube
பேரணியில் PKR உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டாம்
அரசியல்

பேரணியில் PKR உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டாம்

Share:

டிச. 30-

PAS ஏற்பாடு செய்துள்ள நஜிப் ரசாக்கை ஆதரிக்கும் பேரணியில் PKR உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டாம் என்று PKR நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Karim வலியுறுத்தியுள்ளார். கையூட்டும் அதிகார முறைகேடலையும் PKR தொடர்ந்து எதிர்த்து வருவதால், இத்தகைய கூட்டத்தின் அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆட்எண்டம் கட்டளை தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்றும், கூட்டத்தின் மூலம் நீதிமன்றத்தை அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஹசன் கரீம் கூறினார். நஜிப் நியாயமான விசாரணையின் பின்னரே தண்டிக்கப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தமது கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க தடை இல்லை என்று அமானா கட்சியின் இளைஞர் தலைவர் Hasbie Muda கூறியிருந்தார். அமானா கட்சி, பாக்காத்தான் ஹரப்பான் ஆகியவற்றின் தலைமைத்துவம் இந்த கூட்டம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் மாமன்னரால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கூடுதல் கட்டளை தொடர்பான நஜிப்பின் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி 6 ஆம் தேதி விசாரிக்க உள்ளது. இந்த சூழலில், PAS கட்சி புத்ராஜெயாவில் உள்ள நீதித்துறை அரண்மனையில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News