மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் அம்னோவுடன் இணைந்து செயல்பட பாஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெர்சாத்துவுடனான கூட்டணியை பாஸ் மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், “ருமா பங்சா” முயற்சியின் கீழ் மலாய்காரர்களை ஒன்றிணைக்கும் பணியில் பாஸ் மற்றும் அம்னோ இணைந்து செயல்படலாம் என அம்னோ பொதுச்செயலாளர் அஷ்ரப் வஜ்டி டசுக்கிதமது முகநூல் பதிவு மூலமாக அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக இன்று காலை Marang, Rusila-வில் நடைபெற்ற சொற்பொழிவு ஒன்றில் கலந்து கொண்ட ஹாடி அவாங், செய்தியாளர்களிடம் பேசுகையில், பெர்சாத்துவுடனான கூட்டணியை பாஸ் கட்சி மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அடுத்த பொதுத் தேர்தலில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான அக்கூட்டணியின்றி, பாஸ் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
என்றாலும், பாஸ் கட்சி மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகவும், எந்த முடிவையும் அவசரமாக எடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.








