Oct 29, 2025
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் ஃபஹ்மி ஃபாட்சில்
அரசியல்

குற்றச்சாட்டை மறுத்தார் ஃபஹ்மி ஃபாட்சில்

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 25-

குறிப்பிட்ட கைதிகளுக்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு அரசாங்கம் கொண்டு வந்துள்ள உத்தேச சட்டத்திருத்த மசோதா, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்காக வரையப்பட்டுள்ள பிரத்தியேக சட்ட மசோதா என்று கூறப்படும் குற்றச்சாட்டை அரசாங்கப் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் மறுத்துள்ளார்.

நஜீப்பை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து, தமது எஞ்சிய காலத் தண்டனையும் வீட்டுக்காவலில் வைப்பதற்காக அம்னோவுடன் இணைந்து பக்காத்தான் ஹராப்பான் இந்த பிரத்தியேக சட்டத்தை வரைந்துள்ளது என்று கூறப்படும் தகவலில் எள்ளளவும் உண்மையில்லை என்று தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி தெரிவித்தார்.

குற்றம் இழைத்த தனி நபர் ஒருவர்,திருந்திய நிலையில் சமூகத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சட்டம் இறற்றப்படவிருப்பதாக அமைச்சர் விளக்கினார்.

Related News