Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பாஸ் கட்சியில் இணைய விண்ணப்பம்
அரசியல்

பெர்லிஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பாஸ் கட்சியில் இணைய விண்ணப்பம்

Share:

கங்கார், பிப்ரவரி.01-

பெர்லிஸ் அரசியல் நெருக்கடியின் போது பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான Saad Seman, Fakhrul Anwar Ismail, Mohd Ridzuan Hashim ஆகிய மூவரின் புதிய உறுப்பினர் விண்ணப்பங்களை அக்கட்சியின் Majlis Syura Ulama ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் கட்சியின் மத்திய செயற்குழுவின் இறுதிப் பரிசீலனைக்காகப் பொதுச்செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று Majlis Syura Ulama உறுப்பினர் Datuk Ahmad Yahaya தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், உட்கட்சிப் பூசல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையிலும், மன்னிப்பு, நல்லுறவு எனும் இஸ்லாமியக் கொள்கைகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாக நிலையிலான கண்டிப்பை விட மக்களின் சேவையே முக்கியம் என்பதால், மூன்று தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் Mursyidul Am PAS Datuk Hashim Jasin விளக்கியுள்ளார்.

Related News

கொடுத்த வாக்குறுதியைப் பின்பற்றும் ரமணன்: சுங்கை பூலோ மக்களுக்காக  ஊதியத்தில் இருந்து 8 லட்சம் ரிங்கிட் நன்கொடை

கொடுத்த வாக்குறுதியைப் பின்பற்றும் ரமணன்: சுங்கை பூலோ மக்களுக்காக ஊதியத்தில் இருந்து 8 லட்சம் ரிங்கிட் நன்கொடை

வடகொரிய அதிபர் தேர்தலில் 99.93% வாக்குகளுடன் கிம் ஜோங் உன் அமோக வெற்றி

வடகொரிய அதிபர் தேர்தலில் 99.93% வாக்குகளுடன் கிம் ஜோங் உன் அமோக வெற்றி

நீதிமன்றத்தில் அருண் துரைசாமியை குலசேகரன் சந்தித்தது குறித்து ஜசெக தலைவர்கள் விமர்சனம்

நீதிமன்றத்தில் அருண் துரைசாமியை குலசேகரன் சந்தித்தது குறித்து ஜசெக தலைவர்கள் விமர்சனம்

பினாங்கில் காணப்பட்ட இரு அமெரிக்க போர்க்கப்பல்கள் வழக்கமான போக்குவரத்திற்காக வந்தவை - தற்காப்பு அமைச்சர் விளக்கம்

பினாங்கில் காணப்பட்ட இரு அமெரிக்க போர்க்கப்பல்கள் வழக்கமான போக்குவரத்திற்காக வந்தவை - தற்காப்பு அமைச்சர் விளக்கம்

மகாதீர் முகமது உட்பட அனைவருமே மீண்டும் அம்னோவில் இணையலாம் - அகமட் மஸ்லான் தகவல்

மகாதீர் முகமது உட்பட அனைவருமே மீண்டும் அம்னோவில் இணையலாம் - அகமட் மஸ்லான் தகவல்

அன்வாரின் பிரதமர் பதவி செல்லாது என்று கூறும் பி.வேதமூர்த்தியின் மனு தள்ளுபடி / வழக்குச் செலவாக 80 ஆயிரம் ரிங்கிட் வழங்க உத்தரவு

அன்வாரின் பிரதமர் பதவி செல்லாது என்று கூறும் பி.வேதமூர்த்தியின் மனு தள்ளுபடி / வழக்குச் செலவாக 80 ஆயிரம் ரிங்கிட் வழங்க உத்தரவு