ரியாத், நவ.11-
இஸ்ரேலின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு லெபனானுக்கு நிதி உதவி வழங்குவதற்கு மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலேசியாவின் இந்த விருப்பத்தை லெபனான் பிரதமர் நஜீப் மக்காத்திக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இன்று அரசு மற்றும் இஸ்லாமிய நாடுகள் சம்பந்தப்பட்ட சிறப்பு உச்சநிலை மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக சவூதி அரேபிய தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கும் நிகழ்வின் போது பிரதமர், மலேசியாவின் உன்னத நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, எகிப்துக்கான நான்கு நாள் அதிகாரத்துவ அலுவல் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் கெய்ரோவிலிருந்து ரியாத் சென்றடைந்தார்.








