மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய தேதிகளை நிர்ணயிக்க தேர்தல் ஆணையமான எஸ்பிஆர், வரும் அக்டோபர் 7ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை நடத்துகிறது.
மலாக்கா சட்டமன்றம் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
28 தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு தேதிகளை தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும்.
சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி, நவம்பர் 22ஆம் தேதிக்குள் தேர்தல் நடைபெற வேண்டும்.
இதற்கிடையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள தகுதியான வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்கள் கடந்த 23 ஆம் தேதி முதல் ஏற்கப்பட்டு வருகின்றன.








