Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வாரிசான் கட்சி விலகுகிறதா? - பரவும் வதந்திக்கு பொதுச் செயலாளர் கண்டனம்
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வாரிசான் கட்சி விலகுகிறதா? - பரவும் வதந்திக்கு பொதுச் செயலாளர் கண்டனம்

Share:

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வாரிசான் கட்சி விலக முடிவு செய்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை அக்கட்சி முற்றிலுமாக நிராகரித்துள்ளது. சபா, ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, வாரிசான் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஒரு போலி அறிக்கை இணையத்தில் வைரலாகி வந்தது.

இது குறித்து வாரிசான் கட்சியின் பொதுச் செயலாளர் Loretto Padua Jr தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். "கட்சியின் நற்பெயரைக் கெடுப்பதற்காகவே திட்டமிட்டு இந்த அவதூறு பரப்பப்படுகிறது. சில தரப்பினர் வதந்திகளைப் பரப்புவது மட்டுமின்றி, பொதுச் செயலாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை போல வாரிசான் கட்சியின் ஆவணங்களையும் போலியாகத் தயாரித்துள்ளனர்" என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

கொள்கை முடிவுகள் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்தப் போலி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Related News