Oct 28, 2025
Thisaigal NewsYouTube
கட்சித் துள்ளலைக் கட்டுப்படுத்த தேர்தலை திரும்பப் பெற வேண்டும் என்று TOK MAT பரிந்துரைக்கிறது
அரசியல்

கட்சித் துள்ளலைக் கட்டுப்படுத்த தேர்தலை திரும்பப் பெற வேண்டும் என்று TOK MAT பரிந்துரைக்கிறது

Share:

பெட்டாலிங் ஜெயா,ஜூலை 13-


தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தால், அவர்களுக்குரிய இடங்கள் காலியாகிவிடும் என்பதை உறுதிசெய்ய, கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால், தேர்தலை திரும்ப நடத்த வேண்டும் என்று அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமது ஹசன் பரிந்துரைத்துள்ளார்.


நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் யாருடைய ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அந்த கட்சியுடன் இணையாத போது, மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம் என்று அவர் கூறினார்.
அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்பப் பெறுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தலாம். மேலும் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான ஆதரவைப் பெற்றால், அந்த இடத்தை காலி செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று முகமட் ஹசான் கூறினார்!

Related News

கட்சித் துள்ளலைக் கட்டுப்படுத்த தேர்தலை திரும்பப் பெற வேண... | Thisaigal News