Oct 29, 2025
Thisaigal NewsYouTube
கெராக்கான் கட்சி வெளியேறுவதை பாஸ் தடுக்காது
அரசியல்

கெராக்கான் கட்சி வெளியேறுவதை பாஸ் தடுக்காது

Share:

ஷா ஆலம், ஜூலை 29-

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலானபேரிக்காதான் நசியனால்-லில் ஓர் உறுப்புக்கட்சியாக இருந்து வரும் கெராக்கான், அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவதை பாஸ் கட்சி தடுக்காது என்று அதன் உதவித் தலைவர் முகமது அமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஓர் கூட்டணியில் உறுப்பியம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிக்கும் உரிமையும், சொந்த நிலைப்பாடும் உள்ளது. எனவே அக்கூட்டணியிலிருந்து கெராக்கான் வெளியேறுவதா? இல்லையா? என்பது குறித்து அக்கட்சியைப் பொறுத்ததாகும் என்று முகமது அமர் குறிப்பிட்டார்.

சீனப்பள்ளிகளுக்கு மதுபான நிறுவனம் ஆதரவு வழங்கி வரும் நிதி திரடட்ம் நடவடிக்கைகள் குறித்து பாஸ் கட்சி தொடர்ந்து சர்ச்சை செய்து வருமானால், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து கெராக்கான் வெளியேறக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதன் துணைத் தலைவர் ஓ டோங் கியோங் அறிவித்து இருப்பது தொடர்பில் பாஸ் கட்சி தகவல் பிரிவுத் தலைவர் எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News