புத்ராஜெயா, டிச.5-
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தையும், சிரமத்தையும், சுமையையும் கருத்தில் கொள்ளுமாறு ஜிஎல்சி எனப்படும் அரசாங்க சார்பு நிறுவனங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக, வெள்ளத்தில் தங்கள் உடமைகளை இழந்த நிலையில் பெரும் பொருள் சேதத்திற்கு ஆளாகியுள்ள பொது மக்கள் மற்றும் வணிகர்களின் சிரமத்தை குறைப்பதில் GLC நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கட்டங்களில் வாடகைக்கு இருக்கும் வணிகர்கள், மாதாந்திர தவணைப்பணத்தை வங்கிகளுக்குசெலுத்தி வரும் பொது மக்கள் ஆகியோரின் நிதி சிரமத்தில் அழுத்தம் கொடுக்காமல், பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அரசாங்க சார்பு நிறுவனங்களுக்கு பிரதமர் வலியுறுத்தினார்.
குறிப்பாக கட்டடங்களின் வாடகைப்பணம் மற்றும் வங்கிகளுக்கு செலுத்தப்படும் தவணைப்பணம் விவகாரத்தில் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் அதீத நெருக்குதல் கொடுக்க வேண்டாம் என்று அரசாங்க சார்பு நிறுவனங்களுக்கு பிரதமர் நினைவுறுத்தினார்.








