கோலகுபு பாரு, மே 11-
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்களிப்பு, மாலை 6 மணிக்கு முடிவுறுவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே எஞ்சியுள்ள வேளையில் மாலை 5.00 மணி வரையில் வாக்குப் பதிவு 60 விழுக்காட்டைத் தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிற்பகல் 3 மணி வரையில் 50.87 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள வேளையில் மாலை 5 மணி வரை இது 60 விழுக்காட்டைத் தண்டியுள்ளது.
காலையில் சில வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்த போதிலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.








