Sep 6, 2026
Thisaigal NewsYouTube
"மாநிலத் தேர்தலுக்காக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தைக்கு தயார்" – மலாக்கா முதலமைச்சர் அழைப்பு
அரசியல்

"மாநிலத் தேர்தலுக்காக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தைக்கு தயார்" – மலாக்கா முதலமைச்சர் அழைப்பு

Share:

மலாக்கா, ஆகஸ்ட்.02-

வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் ‘BN Plus’ கூட்டணி முறையின் கீழ் எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அம்மாநில பாரிசான் நேஷனல் தலைவரும், முதலமைச்சருமான டத்தோஸ்ரீ Ab Rauf Yusoh தெரிவித்துள்ளார்.

ஒத்துழைப்பில் ஆர்வம் கொண்ட எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளையில், பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் உடனடியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கருதிவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் பலமும் சூழ்நிலையும் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாரிசான் - பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான ஒத்துழைப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மலாக்கா மாநிலத் தேர்தலிலும் வெற்றி வேகத்தைத் தொடர வேண்டும் என பாரிசான் நேஷனல் கூட்டணியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மாநிலத் தலைவர்களை அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது வேண்டாம் - ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்து

அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது வேண்டாம் - ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்து

2014-ல் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? - ஹாடியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க தூதரகம் திட்டவட்ட மறுப்பு

2014-ல் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதியா? - ஹாடியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க தூதரகம் திட்டவட்ட மறுப்பு

"16-வது பொதுத்தேர்தலுக்கு அவசரம் தேவையில்லை" - பிரதமருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்து அந்தோணி லோக் கருத்து

"16-வது பொதுத்தேர்தலுக்கு அவசரம் தேவையில்லை" - பிரதமருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்து அந்தோணி லோக் கருத்து

சுல்தான் அமினா மருத்துவமனை நிபுணர் மீதான பாலியல் தொல்லை புகார்: விசாரணை இறுதிக்கட்டத்தில்

சுல்தான் அமினா மருத்துவமனை நிபுணர் மீதான பாலியல் தொல்லை புகார்: விசாரணை இறுதிக்கட்டத்தில்

அரசாங்கத்தைக்  கவிழ்க்க அமெரிக்கா உதவி வழங்க முன்வந்தது – ஹாடி அவாங் பரபரப்பு குற்றச்சாட்டு

அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா உதவி வழங்க முன்வந்தது – ஹாடி அவாங் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜாஹிட்  வழக்கில் பாஸ் பிரதிநிதி அறியாமையுடன் பேசுகிறார் – ராம்கர்பால்

ஜாஹிட் வழக்கில் பாஸ் பிரதிநிதி அறியாமையுடன் பேசுகிறார் – ராம்கர்பால்