Oct 24, 2025
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் பின்னடைவு ஏற்படலாம்
அரசியல்

பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் பின்னடைவு ஏற்படலாம்

Share:

6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களை டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு மலேசியாவிற்கு ஏற்படலாம் என்ற பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிப்பகுதியின் முக்கிய மாநிலங்களாக சிலாங்கூரும், பினாங்கும் விளங்குகிறன. இந்த இரு மாநிலங்களை கைப்பற்றி, மூன்றாவதாக நெகிரி செம்பிலான் மாநிலத்தையும் பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம், அந்நிய நாட்டவர்களின் நேரடி முதலீடுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் நகர்ச்சி பெரும் அளவில் பாதிக்கப்படும் என்று வர்த்தக, பொருளதார ஆய்வாளர்கள் எவ்.எம்.தி யிடம் தெரிவித்துள்ளனர்.

பெரிக்காத்தான் நேஷனலில் அங்கம் வகிக்கும் உறுப்புக்கட்சிகளின் மனோநிலைப் போக்கே இந்த பொருளாதார பின்டைவுக்கு முக்கிய காரணிகளாக அமையலாம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News