Aug 7, 2026
Thisaigal NewsYouTube
இணைய மோசடி, சூதாட்ட பதிவுகள் தானாகவே நீக்கம் – சமூக ஊடகங்களுக்கு அமைச்சு அவகாசம்
அரசியல்

இணைய மோசடி, சூதாட்ட பதிவுகள் தானாகவே நீக்கம் – சமூக ஊடகங்களுக்கு அமைச்சு அவகாசம்

Share:

இணைய மோசடி மற்றும் சூதாட்டம் தொடர்பான அதிக ஆபத்துள்ள பதிவுகளை தானாகவே அகற்றும் நடைமுறையை செயல்படுத்துவதற்காக, சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இணைய பாதுகாப்புச் சட்டம் 2025 – இன் கீழ் சிறார் பாதுகாப்பு மற்றும் ஆபத்து குறைப்பு விதிமுறைகளைப் பின்பற்ற, சமூக ஊடக நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்களது உள்கட்டமைப்பை அதற்கேற்ப மாற்றுவதற்கு, கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இணைய மோசடி மற்றும் சூதாட்ட பதிவுகளை அகற்ற தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விடுத்துள்ள கோரிக்கைகள் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு பதிவையும் அகற்றும் நடவடிக்கைக்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படுவதால் அதிகாரிகளின் பணிச்சுமை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

Related News

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்