Apr 23, 2026
Thisaigal NewsYouTube
முக்ரிஸ் மகாதீரின் விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி
அரசியல்

முக்ரிஸ் மகாதீரின் விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி

Share:

கோலாலம்பூர், ஜன.2-

கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை நிலுவையில் இருந்து வரும் 50 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் வருமான வரியை செலுத்துமாறு தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை நீதிமன்றத்தில் சவால் விடுவதற்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் மகன் முக்ரிஸ் மகாதீர் தொடுத்துள்ள நீதிமன்ற நடவடிக்கைக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

முக்ரிஸ் மகாதீர், கடந்த 2017 இல் 25 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டையும், 2018 இல் 24 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட்டையும், 2019 இல் 16 லட்சத்து 82 ஆயிரத்து 637 ரிங்கிட்டையும் செலுத்துமாறு வருமான வரி வாரியம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.

இவ்வழக்கு மீதான விசாரணை வரும்
ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி அமார் சிங், விசாரணை தேதியை நிர்ணயித்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!