முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் அவாங் ஹாடி மற்றும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் ஆகிய மூவரும் மலாயா தீவிரவாதிகள் என்று சபாவைச் சேர்ந்த துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வில்பிரட் மேடியஸ் டாங்காவ் சாடினார்.
இந்த மூவரும் ஒரே இன நாடாக மலேசியாவை மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். காலனித்துவக் காலத்திற்கு முன்னதாக தானா மேலாயு என்று மலாயா விளங்கியது. அதனை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில் இந்த மூவரின் அண்மையய கால பேச்சுக்கள் இருக்கின்றன என்று வில்பிரட் மேடியஸ் சுட்டிக்காட்டினார்.
பல இனங்கள், பல சமய நம்பிக்கைகள் போன்றவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஒரே சமயம், ஒரே இனம் என்ற அளவில் மறுபடியும் தானா மேலாயு என்று மலேசியாவின் பெயரை மாற்றுவதற்கு இந்த மூன்று மலாயா தீவிரவாதிகளும் முயற்சி செய்து வருகின்றனர் என்று வில்பிரட் மேடியஸ் குற்றஞ்சாட்டினார்.
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும் இந்த மூவரும் தீ மூட்டி வருகின்றனர் என்று யு பி கே ஓ ( உப்கோ ) எனப்படும் கினபாலு முன்னேற்றக் கட்சியின் தலைவருமான வில்பிரட் மேடியஸ் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
