பினாங்கு, நவ.22-
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அரை மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ஆயிரம் ரிங்கிட் தொகை வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் செள கோன் இயோ அறிவித்துள்ளார்.
இந்த போனஸ் தொகை அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்படும். இன்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் 940 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 2025 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் உரையாற்றுகையில் செள கோன் இயோ, அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை அறிவித்தார்.
மாநில அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த போனஸ் தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








